Saturday, 28 March 2015

27/03/2015 எங்கள் பள்ளி ஆண்டுவிழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டுவிழா 27,03,2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. உத்திரமேரூர் உதவி/கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் கலந்துகொண்டனர். கிராமக்கல்விக்குழு தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும், பொதுமக்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர், எங்கள் வட்டாரத்தின் காவல்துறை ஆய்வாளர் அவர்களும் பேரூராட்சி துணைத்தலைவர் அவர்களும் கலந்துகொண்டனர். சித்ரா டீச்சர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். எங்கள் பகுதியில் உள்ள கனரா வங்கியின் மேலாளர் கலந்துகொண்டார். விழாவில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புண்ணிய புரவலர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை எங்கள் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் செய்திருந்தினர்,. விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.





எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துச்செய்திகளை வீடியோ வடிவில் ஒளிபரப்பினோம். விழாவில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களின் வாழ்த்துரை.






















No comments:

Post a Comment